பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை சவூதி நிறுத்த வேண்டும்

hilariசவூதி அரேபியா போன்ற நாடுகள் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளராகவிருக்கும் ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறியதாவது:

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பதை சவூதி அரேபியா, கத்தார், குவைத் போன்ற நாடுகள் இனியாவது நிறுத்த வேண்டும்.

மேலும், உலகின் பல்வேறு நாடுகளில் இளம் சிறுவர்களின் மனங்களில் மதவெறியை விதைக்கும் மதரஸாக்களுக்கும், மசூதிகளுக்கும் நிதியுதவி அளிப்பதையும் அந்த நாடுகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.

ஆர்லண்டோவில் தாக்குதல் நிகழ்த்திய பயங்கரவாதி போலீஸாரால் கொல்லப்பட்டுவிட்டார். ஆனால் அவரது மனதில் விதைக்கப்பட்ட நச்சுக் கிருமி இன்னும் உயிரோடு இருக்கிறது என்றார் அவர்.

சவூதி அரேபியா, கத்தார், குவைத் ஆகியவை அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY