பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குக

indexபயங்கரவாத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென அரசாங்கத்திடம் மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பும், இலங்கை மனித உரிமை கேந்திர நிலையமும் கூட்டாக இணைந்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு சமாந்திரமாக, பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளன.

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவாக பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்கும் சட்டங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளன.

வழக்குத் தொடராது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலம் தடுத்து வைத்திருந்தவர்களை விடுதலை செய்வதாக அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY