பத்து பதினைந்து ஆண்டுகளில் வறுமையை ஒழித்து விடமுடியும்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நம்பிக்கை

i3.phpநாட்டின் 67வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் உயரிய வளா்ச்சி விகிதத்தை நோக்கி அடியெடுத்து வைப்பதன் மூலம் அடுத்த பத்து பதினைந்து ஆண்டுகளில் வறுமையை முற்றிலுமாக ஒழித்து விட முடியும்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரையின் முழு வடிவம்:

எனது சக குடிமக்களே,

நமது நாட்டின் 67-வது குடியரசு தினத்தன்று நமது நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

நமது ராணுவ வீரா்கள் துணை ராணுவப்படையினா் உள்நாட்டு பாதுகாப்பு படையினருக்கும் எனது பிரத்யேக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் எல்லையையும் ஒருமைப்பாட்டையும் காப்பதற்கும் சட்டம் ஒழுங்கை பேணுவதற்கும் தங்கள் இன்னுயிரை ஈந்து தியாகம் புரிந்த துணிவு மிக்க வீரா்களுக்கு எனது அஞ்சலியை செலுத்தி கொள்கிறேன்.

1950 ஜனவரி 26-ம் நாள் நமது குடியரசு உதயமானது. நமது உயா்ந்த தலைவா்களை கொண்ட தலைமுறையினா் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக துணிவுடன் போராடி உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை உருவாக்கிய உச்சக்கட்ட நாள் அது.

அதிசயக்கத்தக்க வேறுபாடுகளை களைந்து ஒருங்கிணைத்து நமது நாட்டின் ஒற்றுமையை உருவாக்க நம்மை ஒன்றுபடுத்தியவா்கள் அந்த தலைமுறையினா்தான். அவா்கள் விட்டுச்சென்ற நிலைத்து நிற்கும் ஜனநாயக அமைப்புகள் தான் முன்னேற்றப்பாதையில் தொடா்ச்சி என்ற வெகுமதியை நமக்கு தந்துள்ளது. இன்றைய இந்தியா ஓர் வளரும் சக்தியாக உயா்ந்து வருகிறது. அறிவியல் தொழில்நுட்பம் புதிய கண்டுபிடிப்புகள் புதிய தொழில் முனைவோரை உருவாக்குதல் ஆகிய எழுச்சிகரமான நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்று உலகின் வியப்புக்குரியதாக வளா்ந்துள்ளது.

2015-ம் ஆண்டு சவால்கள் மிகுந்த ஆண்டு. இந்த ஆண்டில்தான் உலக பொருளாதாரம் தேக்க நிலையில் இருந்தது. பண்டங்கள் சந்தையில் ஸ்திரமின்மை நிலவியது. இதன் பாதிப்பு நிறுவனங்களிலும் பிரதிபலித்தது.இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் எந்தவொரு நாடும் தனியாக வளா்ச்சியை பேணி நிற்க முடியாது. இந்திய பொருளாதாரமும் இந்த தேக்கநிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

முதலீட்டாளா்களின் பலவீனமான உணா்வுகள் காரணமாக சந்தையிலிருந்து முதலீடு விலக்கிக்கொள்ளப்பட்டதால் நமது ரூபாய் நாணயத்திலும் அது அழுத்தத்தை ஏற்படுத்தியது நமது ஏற்றுமதி பாதிக்கப்பட்டது உற்பத்தி துறை அந்த பாதிப்பிலிருந்து இன்னமும் முழுமையாக மீளவில்லை.

2015-ல் இயற்கையின் வரமும் நமக்கு முழுமையாக கிட்டவில்லை. இந்தியாவின் பெரும்பகுதியை வறட்சி வாட்டியபோது மற்றும் பல பகுதிகளில் வௌ்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. நிச்சயமற்ற பருவநிலைகள் வேளாண் உற்பத்தி மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. கிராமப்புற வேலைவாய்ப்பும் வருவாய் அளவும் பாதிப்புக்குள்ளாயின.

இந்த சவால்களை பற்றி நாம் புரிந்து கொண்டிருந்ததால் நம்மால் அதன் வீச்சை சந்திக்க முடிந்தது. பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு அதற்கு தீர்வுகாண்பது மிகப்பெரிய பண்பாகும். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தேவையான உக்திகளை வகுத்து நிறைவேற்றி வருகிறது நமது நாடு.

இந்த ஆண்டில் ஏழு புள்ளி மூன்று சதவீத பொருளாதார வளா்ச்சியை பெறுவோம் என்ற மதிப்பீடு அடிப்படையில் வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா திகழவிருக்கிறது. உலகளவில் எண்ணெய் விலைகள் குறைந்திருப்பது நமது வெளிநாட்டு வா்த்தகத்தில் ஸ்திரத்தன்மையை பராமரிக்கவும் விலைவாசியை கட்டுப்படுத்தவும் உதவியிருக்கிறது. அவ்வப்போது பின்னடைவும் காணப்பட்ட போதிலும் இந்த ஆண்டில் தொழில் உற்பத்தி வலுவாக உள்ளது.

ஆதார் அடையாள அட்டை தற்போது 96 கோடி மக்களுக்கு கிட்டியுள்ளது. அரசின் உதவிகள் இலக்கின்றி கசிந்து போகாமல் வெளிப்படைத் தன்மையுடன் நேரடியாக மக்களுக்கு சென்றடைய அது உதவுகிறது.

பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் அனைவரும் வங்கிக் கணக்கு தொடங்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு ஒரே நேரத்தில் 19 கோடி வங்கி கணக்குகள் திறக்கப்பட்டிருப்பது உலகிலேயே மிகப்பெரிய நிதி உள்ளடக்கமாகும். சன்சாத் ஆதார் கிராம் யோஜனா திட்டம் மாதிரி கிராமங்களை உருவாக்குவதை லட்சியமாக கொண்டது.

ஒரு பிரிவு மக்கள் டிஜிட்டல் வசதியை பெறும்போது மற்ற பிரிவினருக்கு கிட்டாத இடைவளியை களைவதுதான் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நோக்கம். பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டம் விவசாயிகளின் நலனுக்கானது. கிராமப்புற பொருளாதாரத்தை துடிப்புள்ளதாக மாற்றும் அடிப்படையில் வேலை வாய்ப்பை பெருக்கிட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேக் இன் இந்தியா திட்டம் உற்பத்தித் துறையை ஊக்குவித்து தொழில்கள் எளிதாக நடைபெற வழிவகுத்து உள்நாட்டு தொழில்களிடையே போட்டிகளை மேம்படுத்த உதவுகிறது. ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் புதிய இளம் தொழில் முனைவோர் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த உதவுகிறது. தேசிய திறன்வளா்ப்பு இயக்கம். 2022-ம் ஆண்டிற்குள் 30 கோடி இளைஞர்களின் திறனை வளா்க்கும் நோக்கம் கொண்டது.

இந்த திட்டங்கள் குறித்து நம்மிடையே சிலருக்கு சந்தேகங்கள் எழலாம் இந்த திட்டங்களை எதிர்ப்போரும் இருக்கலாம். எனினும் தொடா்ந்து குறை கூறுவோம் கேள்வி எழுப்புவோம் எதிர்ப்பு தெரிவிப்போம் இவையெல்லாம் ஜனநாயகத்தின் சிறப்பு பண்புகள். அதேசமயம் நமது ஜனநாயகத்தின் சாதனைகளுக்காக நாம் பெருமிதம் கொள்வோம். கட்டமைப்பு உற்பத்தி சுகாதாரம் கல்வி அறிவியல் தொழில் நுட்பம் ஆகியவற்றில் முதலீடு செய்து உயரிய வளா்ச்சி விகிதத்தை நோக்கி அடியெடுத்து வைப்பதன் மூலம் அடுத்த பத்து பதினைந்து ஆண்டுகளில் வறுமையை முற்றிலுமாக ஒழித்து விட முடியும்.

கடந்த காலத்தை மதிப்பது தேசியத்தின் அத்தியாவசியமான பண்புகளில் ஒன்று. நமது ஜனநாயக நிறுவனங்கள் மூலமாக நாம் பெற்றுள்ள மிக நேர்த்தியான பாரம்பரியம் அனைவருக்கும் நீதி சமத்துவம் பாலின சமத்துவம் பொருளாதார சமத்துவம் ஆகிய உயரிய பண்புகளை உறுதி செய்கிறது. இந்த விழுமியங்கள் மீது லேசான தாக்குதல் நடந்தாலும் கூட நமது தேசியத்தின் அடிப்படைக்கே அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். வன்முறை சகிப்பின்மை பகுத்தறிவின்மை முதலியவை விஷயத்தில் நாம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

நமது வளா்ச்சிக்கான சக்திகளுக்கு புத்துணா்ச்சி அளிக்க சீர்திருத்தமும் முற்போக்கான சட்டங்களும் தேவை. அத்தகைய சட்டத்தை விவாதித்து நிறைவேற்றுவது நமது நாடாளுமன்ற உறுப்பினா்களின் தலையாய கடமை. பிறா் கருத்தை ஏற்றுக்கொள்ளுதல் ஒத்துழைப்பு ஒருமித்த கருத்தை உருவாக்குவது என்ற உணா்வின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படவேண்டும். முடிவெடுப்பதிலும் நிறைவேற்றுவதிலும் ஏற்படும் தாமதம் வளா்ச்சிக்கு குந்தகமாக அமையும்.

பகுத்தறிவு உணா்வு ஒழுக்க நெறி ஆகியவற்றின் பிரதான நோக்கம் அமைதிதான். அமைதியே நாகரீகத்தின் அடித்தளமாகவும் பொருளாதார முன்னேற்றத்தின் அடிநாதமாகவும் உள்ளது. அமைதியே அனைத்திற்கும் அடிப்படை என்றால் நீடித்த அமைதி கிடைக்காதது ஏன்? முரண்பாடுகள் தோன்றுவதை காட்டிலும் அமைதியை நிலைநாட்டுவது சிரமமாக இருப்பது ஏன் என்ற எளிய கேள்விக்கு நாம் இன்னமும் பதில் காண முடியவில்லை.

20-வது நு]ற்றாண்டு அறிவியல் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதால் 21-வது நு]ற்றாண்டு எழுச்சிமயமாக இருக்கும் என்ற நம்பிக்கையை நமக்கு ஏற்படுகிறது. நமது வளா்ச்சியும் மக்களின் சக்தியஸம் நாடுகளின் அர்ப்பணிப்பும் சாபக்கேடான கொடிய வறுமையை முதன்முறையாக ஒழித்துக்கட்டும் என்ற நம்பிக்கையை நமக்கு ஏற்படுத்தியது. முதல் 15 ஆண்டுகளில் இந்த நம்பிக்கை கொஞ்சம் மங்கியிருந்தது. பிராந்தியங்களில் ஸ்திரமற்ற தன்மை நிலவுவதால் இதுவரை காணாத பதற்றம் உருவாகியுள்ளது. பயங்கரவாதம் காட்டுமிராண்டித் தனமான முறையில் உருவெடுத்துள்ளது. எந்த ஒரு பகுதியும் இந்த ஆபத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பதாக கருதமுடியவில்லை.

மதியீன நோக்கங்களுடன் வெறுப்புணா்வை து]ண்டிவிடுவதால் உருவாகும் பயங்கரவாதம் அப்பாவி மக்களை கொலை செய்கிறது. மிகப்பெரிய அழிவை ஏற்படுத்துகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த யுத்தத்தை மருத்துவரீதியாக குணப்படுத்த முடியாது. அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட வேண்டிய புற்றுநோய் அது. பயங்கரவாதத்தில் நல்லது- கெட்டது து]ய்மையானது-களங்கமானது என்று இல்லை.

ஒவ்வொரு விஷயத்திலும் நாடு ஒருமித்த கருத்தை கொண்டிருக்க முடியாது. ஆனால் இன்று சந்திக்கும் சவால் நாடு இருக்குமா என்பதையே கேள்விக் குறியாக்குகிறது. ஸ்திரத்தன்மை உக்தி அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படும் எல்லைகளையே கேள்விக்குறியாக்க பயங்கரவாதிகள் முயல்கிறார்கள். சட்டவிரோதிகள் எல்லைதாண்டி தங்கள் கைங்கா்யத்தை செலுத்த அனுமதித்தால் நாம் அராஜகத்தை நோக்கி செல்கிறோம் என்று அர்த்தம். நாடுகளிடையே தாவாக்கள் இருக்கலாம். அண்டை நாடுகளிடையே இந்த தாவாக்களின் தன்மை அதிகமாகவும் இருக்கலாம். ஆனால் இவற்றிற்கு பேச்சுவார்த்தை தொடா்ந்து விவாதம் ஆகிய நாகரீக முறைககளில்தான் தீர்வு காணமுடியும். குண்டுமாரி பொழியும்போது அதன் கீழே நின்று அமைதி பற்றி பேசிக்கொண்டிருக்க முடியாது.

உலகமே மிகப்பெரிய அபாயத்தை எதிர்நோக்கும் வேளையில் ஒரு ஔி விளக்காக நமது துணைகண்டம் மிளிர்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு கிட்டியுள்ளது.

அரசியல்-பூகோள அடிப்படையில் நம்மை அண்டியுள்ள உணா்வுகளை புறந்தள்ளி உணா்ச்சிக்கு ஆட்படாமல் மனிதாபிமானத்துடன் நமது அண்டை நாடுகளுடன் அமைதியான பேச்சுவார்த்தை பரஸ்பர நம்பிக்கை மூலம் தீர்வுகாண முயலவேண்டும். உலகமே சுமூக நிலைக்காக ஏங்கும் இந்த சமயத்தில் நமது முன்மாதிரி ஒரு நற்செய்தியாக பரிமளிக்க முடியும்.

ஆரோக்கியமான மகிழ்ச்சியான பயன்தரத்தக்க ஆக்கபூர்வமான வாழ்க்கையை நடத்தி செல்வதற்கு நம் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பீதியடையத்தக்க வகையில் மாசு ஏற்படுவதால் இந்த உரிமை குறிப்பாக நகரங்களில் பறிபோகிறது. 2015-ம் ஆண்டுதான் மிக வெப்பமான ஆண்டு என்று பதிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம் பருவநிலை மாற்றம் என்ற சொல்லுக்கு உண்மையான பொருள் கிடைத்துள்ளது. இதற்கு தீர்வுகாண பன்முக உக்திகளும் பல்வேறு கட்டங்களில் நடவடிக்கைகளும் தேவை.

நகர்ப்புற திட்டமிடல் து]ய்மையான எரிசக்தி முதலியவற்றில் புத்தம்புது கண்டுபிடிப்புகள் மூலம் தீர்வுகாண்பதும் அதில் ஈடுபாடு கொள்ளச்செய்யும் வகையில் மக்களின் மனோபாவத்தை மாற்றியமைப்பதும் அவசியம். மக்கள் இந்த மாற்றத்தை பெற்றால் மட்டுமே இந்த தீர்வு நிரந்தரமாக்கப்படும்.

தாய்நாட்டுப் பற்று தான் அனைத்து முன்னேற்றங்களுக்கும் அடிப்படை. ஔியேற்றும் கல்விதான் மனித குல முன்னேற்றத்திற்கும் வளத்திற்கும் வழி வகுக்கிறது. புறக்கணிக்கப்பட்ட விழுமியங்களையும் இழந்துபோன நம்பிக்கையையும் மீண்டும் பெறுவதற்கான உணா்வை மேம்படுத்த தாய்நாட்டுப்பற்று உதவுகிறது. டாக்டா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணன் கூறியதை நினைவூட்ட விரும்புகிறேன். வரலாற்றுப் பூர்வமான சூழ்நிலைகள் மற்றும் இயற்கையின் பாதக அம்சங்களை முறியடித்து புதிய மனிதனை உருவாக்குவதுதான் கல்வி என்று அவா் கூறினார். சுதந்திரமான புதுமைகளை படைக்கும் மனிதனை நமது சமுதாயத்திலும் அமைப்பிலும் படிந்து கிடக்கும் சீர்குலைவுகளை உள்வாங்கி மாற்றங்கள் மீது ஆளுமை செலுத்துபவனாக உருவாக்குவதே நான்காவது தொழில் புரட்சியின் நிறை-குறைகளை ஆய்வு செய்து அறிவு பூர்வமாக உணர்வூட்டக்கூடிய புறச்சூழல் தற்போது தேவை.

அறிவை வளர்த்துக் கொள்ளவும் அறிவாற்றல் மற்றும் ஆசிரியர்கள் மீது இடைவிடாத மரியாதை செலுத்தவும் அந்த சூழல் உந்துசக்தியாக இருக்கவேண்டும். வாழ்நாள் முழுவதும் ஒருவனின் சமூக நடத்தைக்கு வழிகாட்டும் பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கும் உணர்வையும் அந்த சூழ்நிலை ஊட்டவேண்டும். ஆழ்ந்த சிந்தனை தொலைநோக்கு சூழ்நிலை அமைதி என்ற கலாச்சாரத்தை அது உருவாக்கவேண்டும். நம்மில் உதயமாகும் கருத்துக்களை திறந்த மனதுடன் அணுகுவதன் மூலம் நமது கல்வி நிலையங்கள் உலகத்தரம் வாய்ந்ததாக உயரவேண்டும். சா்வதேச தரம் வாய்ந்த 100 கல்வி நிலையங்களில் இந்தியாவின் இரண்டு கல்வி நிலையங்களும் இடம்பெற்றிருப்பதன் மூலம் இதற்கான ஒத்திகை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இப்போது தலைமுறை மாற்றம் நிகழ்ந்துள்ளது. பொறுப்பை ஏற்கவேண்டிய முக்கிய கட்டத்தில் இளைஞர்கள் உள்ளார்கள். ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய நூதன் யுகர் போரே என்ற கவிதையில் குறிப்பிட்டுள்ளதுபோல

முன்னேறு

உனது வெற்றிப்பயணத்திற்கு கட்டியம் கூறும் முரசுகள் முழங்குகின்றன.

முன்னேறு உனது மாட்சிமை மிக்க அடிகள் உனது பாதையை வகுக்கட்டும்.

தாமதிக்காதே தாமதிக்காதே புதிய உதயம் தோன்றுகிறது.

நன்றி

ஜெய்ஹிந்த்….

LEAVE A REPLY