பதவியேற்றார் கோத்தாபய

எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தாபய ராஜபக்ச இன்று (18) முற்பகல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக அநுராதபுரம் – ருவன்வெலிசை மஹாசாயவில் பதவியேற்றார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, ஜனாதிபதி செயலாளர் உதய ஆர் செனவிரத்ன மற்றும் பௌத்த தேரர்கள் முன்னிலையிலேயே அவர் பதவியேற்றுள்ளார்.

இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட பலர் கலந்து கொண்டனர்.