‘பண்டாரநாயக்கவின் பெயரையும் கொள்கைகளையும் விற்று உண்கிறார்கள்’

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நிறுவுனரும் முன்னாள் பிரதமருமான பண்டாரநாயக்கவின் பெயரையும் கொள்கைகளையும் விற்று உண்ணும் திருடர்களும் கொளைகாரர்களுமே இந்நாட்டில் தற்போதும் வாழ்ந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அவர்கள் இப்போதும் பண்டாரநாயக்கவின் பெயரையும் கொள்கைகளையும் ஏன் விற்று உண்கிறார்கள் என்று தெரியவில்லையென அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நிறுவுனரும் முன்னாள் பிரதமருமான S.W.R.D பண்டாரநாயக்கவின் 120ஆவது பிறந்த தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துக்​கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று காலை காலி முகத்திடலில் S.W.R.D பண்டாரநாயக்கவின் நினைவுத் தூபிக்கு மலர்செண்டு வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துக்கொண்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும், ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கும் இடையில் எவ்வித உரையாடல்களும் இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.