‘பஞ்சுமிட்டாய்’ 4 எழுத்தாளர்கள் சேர்ந்து திரைக்கதை அமைத்த படம்

டைரக்டர் அமீரிடம் உதவி டைரக்டராக இருந்த எஸ்.பி.மோகன், ‘பஞ்சு மிட்டாய்’ என்ற படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார். இந்த படத்தின் கதையை எஸ்.பி.மோகன் எழுத, ஜே.பி.சாணக்யா, எழில் வரதன், கோபாலகிருஷ்ணன், எஸ்.செந்தில்குமார் ஆகிய 4 எழுத்தாளர்களும் சேர்ந்து திரைக்கதை அமைத்து இருக்கிறார்கள். சரவணன், ராஜேந்திரன் ஆகிய இருவரும் வசனம் எழுதியிருக்கிறார்கள். படத்தை பற்றி டைரக்டர் எஸ்.பி.மோகன் கூறியதாவது:-

“2 சிறுகதைகளை இணைத்து இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் திருமணமான ஒரு மாதத்தில் நடக்கும் சம்பவங்களை கதையாக கொண்ட படம், இது. 2 நண்பர்களின் வாழ்க்கையில் ஒரு பெண் நுழைவதால் ஏற்படும் நிகழ்வுகளே திரைக்கதை.

மா.கா.ப.ஆனந்த், நிகிலா விமல், சென்ராயன், பாண்டியராஜன், தவசி, கலைராணி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில், மா.கா.ப.ஆனந்த் பரோட்டா கடை மாஸ்டராகவும், அவருடைய மனைவியாக நிகிலா விமலும், சென்ராயன் டீ மாஸ்டராகவும் வருகிறார்கள்.

எஸ்.கணேஷ், எம்.எஸ்.வினோத்குமார் ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர். சென்னை, சிதம்பரம், திருவண்ணாமலை, புவனகிரி சுற்றுவட்டாரங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.”

LEAVE A REPLY