பசிலுக்கும் மைத்திரிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு இந்த விசேட தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவுடன் இணைந்து மொட்டு சின்னத்தின் கீழ் போட்டியிடவுள்ளது.

எனினும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, 2020 பொதுத் தேர்தலில் சில மாவட்டங்களில் தனித்து போட்டியிடும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.

நுவரேலியா, களுத்துறை, வன்னி மற்றும் யாழ் மாவட்டங்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கை சின்னத்தின் கீழ் தனித்து போட்டியிடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடும் என்றும் அவர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.