பகிடிவதைக்கு அஞ்சி மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்வதனை தவிர்க்கின்றனர் – ஜனாதிபதி

பகிடிவதைக்கு முகங்கொடுக்க நேரிடும் என்ற அச்சத்தில் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்வதனை தவிர்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இவ்வாறு பல்கலைக்கழகத்திற்கு செல்வதனை தவிர்ப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

அபிலிருத்தியடைந்த நாடுகளில் 20 வயது இளைஞர், யுவதிகள் பட்டம் பெற்று வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொண்டாலும் இலங்கையில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பல்கலை அனுமதிக்காக பல வருடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே இந்த முறையை மாற்றுவதற்கான காலம் உருவாகியுள்ளது எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.