நைஜீரியாவில் தொடர் தற்கொலைத் தாக்குதல்கள்; 39 பேர் பலி

1445005992-6461நைஜீரியாவின் வடகிழக்கு நகரமான மைதுகுரிக்கு அருகே மேலும் ஒரு தற்கொலைத் தாக்குதல் நடந்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

நேற்று வியாழனன்று பள்ளிவாசல் ஒன்றில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இன்றைய தாக்குதலில் மூன்று பெண் தற்கொலையாளிகள் தங்களில் பொருத்தியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கவைத்து தாக்குதல் நடத்தியிருந்ததாகவும் அதில் மேலும் நான்கு பேர் பலியானதாகவும் முன்னதாக வந்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
நேற்று பள்ளிவாசலில் மாலை நேர தொழுகை நடந்துகொண்டிருந்த போது, தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இருநாள் தாக்குதல்களிலும் குறைந்தது 39 பேர் பலியானதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அண்மைக் காலங்களில் பல தாக்குதல்கள் நடந்துள்ள போதிலும், அரசாங்கம் இஸ்லாமியவாத ஆயுதக்குழுவான போகோ ஹராமுக்கு எதிரான போரில் வெற்றிபெற்று வருவதாக நைஜீரிய இராணுவத்துக்காக பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY