நைஜீரியாவில் ஜெர்மனி நாட்டு சமூகச் சேவகர் கடத்தல்

நைஜீரியா நாட்டில் போக்கோஹரம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து தங்களது வசிப்பிடங்களைவிட்டு வெளியேறி அகதிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்தவர்களுக்கான உதவிகளை ஜெர்மனி நாட்டை சேர்ந்த அரசுசாரா தொண்டு நிறுவன ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மாலி உள்ளிட்ட பிறநாடுகளை சேர்ந்த சுமார் 17 லட்சம் அகதிகளின் பசிப்பிணி போக்கும் சேவையில் இந்த தொண்டு நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நைஜீரியா நாட்டின் மேற்கு பகுதியில் தொண்டு நிறுவன ஊழியரை நைஜீரியாவில் ஆயுதம்தாங்கிய பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டில்லாபேரி பகுதியில் உள்ள அயோரோவ் நகரில் ஐந்துபேரை சில பயங்கரவாதிகள் கடந்த புதன்கிழமை கடத்திச் சென்றனர். அவர்களில் உள்ளூர்வாசிகள் நான்குபேர் மட்டும் விடுவிக்கப்பட்ட நிலையில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த தொண்டு நிறுவன ஊழியரின் நிலை என்னவானது? என்பது தெரியவில்லை.

LEAVE A REPLY