நேற்று அனிருத்; இன்று யுவன்; சக்க போடு போடு(ம்) சிம்பு

நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் காட்டி வந்த சிம்பு முதன்முறையாக சக்க போடு போடு ராஜா என்ற படத்திற்காக இசையமைப்பாளராக அறிமுகமாகுகிறார்.

சேதுராமன் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க, விவேக், ரோபோ சங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

சிம்புவின் நண்பர் விடிவி கணேஷ் தயாரித்துள்ளார்.

சில தினங்களுக்கு இப்படத்தில் அனிருத் பாடிய கலக்கு மச்சான் என்ற பாடல் புரோமோவை வெளியிட்டு அதன்பின் பாடலை வெளியிட்டனர்.

இப்போது மற்றொரு பாடலான ’காதல் தேவதை’ பாடலின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

இப்பாடலை வைரமுத்து எழுத யுவன்ஷங்கர் ராஜா பாடியுள்ளார்.

அண்மையில் சந்தானம் அறிமுக பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர்.

அதில் முதன்முறையாக ராஜு சுந்தரம், ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி
ஆகிய 5 நடன இயக்குனர்கள் பணியாற்றியுள்ளனர்.

அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய படத்தொப்பை ஆன்டனி கவனித்து வருகிறார்.

நவம்பர் 14 தேதி சத்யம் திரையரங்கில் பிரமாண்டமான இசை விழா நடைபெற உள்ளது.

LEAVE A REPLY