நேபாளத்தின் புதிய பிரதமர் சீனாவுக்கு ஆதரவானவர்; சீன ஊடகம் வெளியிட்ட கட்டுரையால் சர்ச்சை

201510162247121143_New-Nepal-PM-KP-Sharma-Oli-is-proChina-Chinese-media_SECVPF.gifநேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி. சர்மா ஒளி பதவியேற்றுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேபாளத்துடன் நட்புறவை வளர்க்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும், கம்யூனிச நாடான நேபாளத்தின் புதிய பிரதமர் சீனாவுக்கு ஆதரவாகவே இருப்பார் என சீனாவின் அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ கட்டுரை வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நேபாளத்தில் புதிய பிரதமர் பதவியேற்று 5 நாட்களே ஆன நிலையில் இந்த கட்டுரை வெளியாகி உள்ளது. மேலும், அந்த கட்டுரையில் நேபாளத்தில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த நேபாளி காங்கிரஸ் கட்சி இந்தியாவிற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் ஆனால், புதிய பிரதமர் சர்மா ஒளி சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவார் எனவும் பெரும்பாலான நேபாள மக்கள் சீனாவுடன் இணைந்து செயல்படவே விரும்புவதாகவும் அப்படி இணைந்து செயல்பட்டால் இரு நாடுகளுக்கும் அது பயனுள்ளதாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY