நீதியரசர்கள் நியமனம் – ஜனாதிபதியின் சிபாரிசுக்கு அரசியலமைப்புச் சபை அங்கீகாரம்

மூன்று உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு ஒரு நீதியரசர் நியமனம் என்ற ஜனாதிபதியின் சிபாரிசுக்கு அரசியலமைப்புச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2019 ஆம் ஆண்டின் அரசியலமைப்புப் பேரவையின் முதலாவது கூட்டம் இன்று (திங்கட்கிழமை) சபாநாயகர் கரு ஜசூரிய தலைமையில் கூடியது.

ஏற்கனவே உச்சநீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றுக்கான நீதிபதிகள் வெற்றிடத்துக்கு அரசியலமைப்புப் பேரவை பரிந்துரைத்த பெயர்களை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டு நியமனம் வழங்கபடவில்லை.

இதன் காரணமாக உச்சநீதிமன்ற நீதியரசருக்கான வெற்றிடம் ஏற்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற நீதியரசர்களாக எஸ். துரைராஜா மற்றும் ஆர். அமரசேகர ஆகியோரை நியமிக்கவும் பத்மன் சூரசேனவை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கவும் அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியது.