நீதித்துறைக்கான நியமனங்கள் அரசியல் தலையீடுகளின்றி வழங்கப்பட வேண்டும் – அஷாத் சாலி

அரசியலமைப்புச் சபையின் ஊடாக நீதித்துறைக்கான நியமனங்கள் அரசியல் தலையீடுகளின்றி வழங்கப்பட வேண்டும் என கொழும்பு மாநகரசபை உறுப்பினர் அஷாத் சாலி வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில், இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நீதித்துறைக்கான நியமனங்கள் கடந்த முறை தகவறான முறையில் வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசியலமைப்புச் சபையின் செயற்பாடுகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே சிதைத்தாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.