நிஸ்ஸங்க சேனாதிபதியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

அவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதற்கமைய அவரை எதிர்வரும் மாதம் 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 17ஆம் திகதி சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு வந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் நிஸ்ஸங்க சேனாதிபதி கைது செய்யப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து பிணை வழங்குமாறு அவர் சார்பில் கோரப்பட்டது. எனினும் அவரின் பிணை நிராகரிக்கப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.