நிலையான அபிவிருத்தியின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு

சிறுபான்மை மக்களினுடைய அடிப்படைத் தேவைகளை இலகு தீர்வின் ஊடாக தீர்ப்பதற்கு மக்கள் ஆட்சியினை எதிர்வரும் காலங்களை உருவாக்கவேண்டும். அது காலத்தில் கட்டாயம் என சிறிய நடுத்தர தொழில் துறை, கைத்தொழில் மற்றும் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

யாழ் கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் தற்போதைய அபிவிருத்தி திட்டங்களை அவதானிக்கும் நோக்கில் நேற்று (17) அமைச்சர் களவிஐயத்தினை மேற்கொண்டார்.

இதன் போது அதன் உற்பத்திப்பொருட்கள், சந்தைப்படுத்தல் முறைகள், வேலைவாய்ப்புகள், உணவு உற்பத்தியின் தராதரம், பங்கீடுத்தன்மை, பொருளாதார முதலீடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

பெரும்பான்மை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் நிலையில் அவர்களுக்கு தமிழ் மக்கள் சார்பாக எந்த அபிவிருத்திகளையும், அபிலாசைகளையும் பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

எமது அரசாங்கத்தின் ஊடாக நிலையான அபிவிருத்தியின் கீழ் சிறுபான்மை மக்கள் தமக்கான தீர்வுகளை எட்ட முடியும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.