நிறைவேற்று அதிகார போக்கில் அரசு செயற்படுவதாக தவராசா குற்றச்சாட்டு

நிறைவேற்று அதிகார போக்கில் மாகாண சபை மற்றும் உள்ளளூராட்சி மன்றங்களை அரசாங்கம் கையாள்வதாக வட. மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் அண்மையில் பாடசாலைகளை அரச பாடசாலைகளாக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மாகாண சபை விடயங்களில் மத்தி தலையிடுவது தவறென தொடர்ந்தும் தான் வலியுறுத்தி வருவதாகவும் இவை எதிர்க்கப்பட வேண்டிய விடயங்களென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாகாண சபை சார்ந்த பிரச்சினைகளில் மத்திய அரசு தலையிட சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது. அதே விடயத்தை தற்போது நிறைவேற்று அதிகாரம் மூலம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும் இவை எதிர்க்கப்பட வேண்டிய விடயமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்