நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு ஜனாதிபதிடம் கோரிக்கை

நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தத் தவறினால் அரசாங்கம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அண்மையில் ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இது குறித்து தலையீடு செய்து நிலைமையை நிவர்த்தி செய்ய வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி நிலையிலிருந்து சுதந்திரக் கட்சியினால் தப்பித்துக் கொள்ள முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் மக்கள் நம்பிக்கையை கட்டியெழுப்ப நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்தும் தீர்மானத்தை ஜனாதிபதி எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தீர்மானங்களின் போது சுதந்திரக் கட்சி, ஜனாதிபதியை தனிமைப்படுத்தாது என சிரேஸ்ட அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY