நிரந்தரத் தீர்வு காண இணைந்து செயற்படுவோம்! – சம்பந்தன் புத்தாண்டு செய்தி

இந்த நாட்­டின் தேசி­யப் பிரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மான தீர்வை அடை­யும் நோக்­கில் சேர்ந்து செயற்­பட முன்­வ­ரு­மாறு அனைத்து அர­சி­யல் கட்­சி­க­ளி­ட­மும் தலை­வர்­க­ளி­ட­மும் வேண்­டு­கோள் விடுக்­கி­றேன் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் கோரிக்கை விடுத்­துள்­ளார். அவர் விடுத்­துள்ள புது­வ­ருட வாழ்த்­துச் செய்­தி­யி­லேயே இந்­தக் கோரிக்­கையை விடுத்­துள்­ளார்.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது: இந்த நாட்டு மக்­கள் அனை­வ­ருக்­கும் இந்­தப் புத்­தாண்டு செழிப்­பா­ன­தும் மகிழ்ச்­சி­யா­ன­து­மாக அமைய எனது இத­யங்­க­னிந்த வாழ்த்­து­க்கள். இந்­தப் புதிய வரு­டத்தை எதிர்­பார்ப்­போ­டும் நம்­பிக்­கை­யோ­டும் வர­வேற்­கின்ற இந்­தத் தரு­ணத்­தில், ஒன்­று­பட்ட நாட்­டின் மக்­க­ளாய் சிறப்­பான எதிர்­கா­லத்தை உரு­வாக்­கு­வ­தற்கு நாம் அனை­வ­ரும் உழைக்க முன்­வ­ர­ வேண்­டும் என்­பதே எனது பிரார்த்­த­னை­யா­கும்.

LEAVE A REPLY