நிபுணர் அறிக்கைக்கு ஐ.தே.க.வின் எந்த பங்களிப்பும் இல்லை – நிமல் குற்றச்சாட்டு!

புதிய அரசியலமைப்பு தொடர்பான நிபுணர்கள் அறிக்கையில் முழு பங்களிப்பு செய்ய ஐக்கிய தேசிய கட்சி தவறி விட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.

அரசியலமைப்பு நிர்ணய சபை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் கூடியது.

அரசியலமைப்பு பேரவையாக நடைபெற்ற இன்றைய நாடாளுமன்ற அமர்வில், அரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவினால் நியமிக்கப்பட்ட, விசேட நிபுணர்கள் கொண்ட குழுவின் அறிக்கை, சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் பின்னர் நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் பேசிய நிமல் சிறிபால டி சில்வா, பிரதான ஆளும் கட்சியாக இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி தற்போது அரசியல் ரீதியாக நாடகமாடுகின்றது.

அந்த அறிக்கையில் அனைத்துப் பிரிவினரின் உணர்ச்சிகளையும் தெரிந்துகொள்ளாமல் ஒரு அரசியலமைப்பை எவ்வாறு உருவாக்க முடியும் என கேள்வியெழுப்பினார்.