நிதி அமைச்சின் கீழ் ஊடகத்துறை சாத்தியமற்றது: மங்கள மீது வழக்கு தொடர்வேன் – பந்துல

ஜனநாயக நாடொன்றில் நிதி மற்றும் ஊடகத்துறை என்பன ஒரே அமைச்சின் கீழ் செயற்படுவது சாத்தியமற்ற. எனவே மங்கள சமவீரவுக்கு எதிராக நான் வழக்கு தொடரவுள்ளேன் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், “கூட்டு எதிர்கட்சியின் சார்பில் நிதி அமைச்சர் மங்கள சமவீரவுக்கு எதிராக நான் வழக்கு தொடரவுள்ளேன். காரணம் ஜனநாயக நாட்டில் நிதி மற்றும் ஊடகத்துறை ஒரு அமைச்சின் கீழ் செயற்பட முடியாது.

எனவே ஊடகங்களை கறுப்பு ஊடகம் என விமர்சிப்பதையும், அவற்றை கட்டுப்படுத்துவதையும் இந்த வருடத்தில் மங்கள சமரவீர கைவிட வேண்டும்.

அமைச்சரவை மற்றும் அது தொடர்பான வர்த்தமானி வெளியிடும் அதிகாரம் ஜனாதிபதியிடம் காணப்படுகின்றது.

எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்” என கூறினார்.