நிதியமைச்சர் பியருக்கு ஆதரவு! – தொழில் அமைச்சர் சாராயத்துக்கு ‘சப்போர்ட்’

சாராயத்தின் விலையை குறைக்குமாறு தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பியர் , வைன் என்பன செல்வந்தர்கள் அருந்தும் ஒன்றாகவே இருக்கின்றது. அதன் விலைகளை குறைப்பதிலும் பார்க்க உடலை வருத்தி தொழில் செய்யும் சாதாரண மக்கள் அருந்தும் ”கல் சாராயம்” எனப்படும் சாராயத்தின் விலையை குறைப்பது சிறந்தது. இதன்படி ஏதேனும் திருத்தத்தை மேற்கொண்டு அதன் விலையை 750 ரூபா வரை குறைப்பது சிறந்தது. என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, மென்பானங்களை விட பியர் அருந்துவது சிறந்தது என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

LEAVE A REPLY