நாம் யாருக்கும் சாதகமாக செயற்படவில்லை: கூட்டமைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்தவொரு தரப்பிற்கும் சாதகமாக செயற்படவில்லை என்றும், தாம் நீதியான மற்றும் நியாயமான முறையிலேயே செயற்பட்டு வருகின்றோம் என, கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பதற்கு கூட்டமைப்பு முயல்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ”கூட்டமைப்பு, ரணில் விக்ரமசிங்கவிற்கோ அல்லது மஹிந்த ராஜபக்ஷவிற்கோ சாதகமாக செயற்படவில்லை.

இவர்கள் இருவரும் தமிழ் மக்களின் உரிமைகளை நிறைவேற்றுவதற்கு தமது ஆட்சிக்காலங்களில் அக்கறை காட்டவில்லை.

எனவே, இத்தருணத்தில் நாம் யாருக்கும் சாதகமாக அன்றி நீதியின் பக்கமே செயற்பட்டு வருகின்றோம்” எனத் தெரிவித்தார்.