நாமலை அதிரடியாக கைது செய்ய மந்திராலோசனை நடத்தும் உயர்மட்டம்!

i3.phpபல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட ராஜபக்ஷர்களை வேட்டையாடும் காலம் ஆரம்பித்து விட்டதாக சிறிலங்கா அரசியல் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திர தினத்திற்கு முன்னர் ராஜபக்சர்களின் இரண்டு பிள்ளைகளை கைது செய்வதாக கூறியதனை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய இதுவரையில் நீதிமன்றத்திற்கு அழுத்தம் பிரயோகித்து விரைவில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ராஜபக்ச குடும்பத்தில் இரண்டாவதாக நாமல் ராஜபக்சவை கைது செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் அமரவீர நேற்றிரவு இரகசிய பேச்சுவார்தை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் போது அமைச்சர் அமரவீர எப்படியாவது நாமல் ராஜபக்சவை கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன் ஊடாக நாமல் ராஜபக்ச அரசியல் செயற்பாட்டை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வலுவிழக்க செய்ய முடியும் என அவர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாமல் ராஜபக்சவை கைது செய்வதென்றால் யோஷித்த ராஜபக்சவை கைது செய்தது போன்று இல்லாமல் குறைந்த பட்சம் 4 – 5 பில்லியன் மோசடிகளை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

இல்லை என்றால் யோஷித்தவை கைது செய்வதற்ககாக ஏற்பட்ட மக்களின் எதிர்ப்பை விடவும் அதிகமான எதிர்ப்பு அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கப்படும் என மைத்திரி கூறியுள்ளார்.

யோஷித்தவை கைது செய்வதற்கு ஆலோசனை வழங்கியது தவறு என அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தனது அழைப்பினை ஏற்படுத்தி கூறியதாகவும், தங்கள் இராஜினாமா செய்துகொள்வதனை தவிர வேறு வழியில்லை என திட்டி தீர்த்ததாகவும், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரிடம் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி தேர்தல் அழைப்பிற்காக மஹிந்த தரப்பினரை கட்டுபடுத்துவதற்காக மஹிந்த தரப்பு முக்கியஸ்தர்கள் பலரை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளதாக மஹிந்த சார்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY