நாமலின் கைதால் மஹிந்த ராஜ­பக்ஷ அவ­ச­ர­மாக நாடு திரும்­பு­கின்றார்!

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஜப்­பா­னுக்­கான விஜயத்தை அவ­ச­ர­மாக நிறைவு செய்து நாளை வெள்­ளிக்­கி­ழமை இரவு இலங்­கைக்கு வரு­கின்றார்.

நீதி­மன்ற தடை உத்­த­ரவை மீறி அம்­பாந்­தொட்­டையில் ஆரப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டமை மற்றும் பொது சொத்­துக்­க­ளுக்கு சேதம் ஏற்­ப­டுத்­தி­யமை தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ உள்­ளிட்ட கூட்டு எதிர் கட்­சியின் உறுப்­பி­னர்கள் மற்றும் ஆத­ர­வா­ளர்கள் கைது செய்­யப்­பட்­டதை அடுத்தே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ அவ­ச­ர­மாக நாடு திரும்­பு­கின்றார்.

மத்­தள விமான நிலை­யத்தை இந்­தி­யா­விற்கு வழங்­கு­வதை கண்­டித்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ உள்­ளிட்ட கூட்டு எதிர் கட்­சி­யினர் அம்­பாந்­தொட்­டையில் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். அங்­குள்ள இந்­திய கொன்­சி­யூலர் அலு­வ­ல­கத்­திற்கு முன்­பா­இந்த ஆர்ப்­பாட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­துடன் அதன் பின்­ன­ரான நிலை­மையை கட்­டுப்­ப­டுத்த பொலிசார் கண்­ணீர்­புகை தாக்­குதல் மற்றும் நீர்­தாரை பிர­யோகம் மேற்­கொண்­டனர்.

இந்த நிலை­யி­லேயே நேற்று முன்­தினம் மாலை அம்­பாந்­தொட்டை பொலிஸ் நிலை­யத்தில் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நாமல் ராஜ­பக்ஷ , பிர­சன்ன ரண­வீர மற்றும் டி.வி. சானக உள்­ளிட்­ட­வர்கள் கைது செய்­யப்­பட்­டனர். எவ்­வா­றா­யினும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ உள்­ளிட்­ட­வர்­களின் கைதுகள் குறித்து முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­விடம் வின­விய போதே , வெள்­ளிக்­கி­ழமை நாடு திரும்ப உள்­ளமை தொடர்பில் அவ­ரது பிரத்­தி­யேக செய­லாளர் உதித் லொக்­கு­பண்­டார தெரி­வித்தார்.

இதே­வேளை அர­சாங்­கத்­திற்கு எதி­ரான ஜன­நா­யக போராட்­டங்­களை பொலி­சாரை கொண்டு அடக்­கு­வது ஏற்­பு­டை­ய­தல்ல. எனவே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ நாடு திரும்­பிய பின்னர் வலு­வான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு கூட்டு எதிர் கட்சி தீர்­மா­னித்­துள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹே­லிய ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார்.

தேசிய சொத்­துக்­களை விற்­பனை செய்­வதை கூட்டு எதிர் கட்சி கொள்கை ரீதி­யா­கவே எதிர்க்­கின்­றது. நாட்டில் உள்ள ஒரு விமான நிலை­யத்தை அந்­நிய நாடு ஒன்­றிக்கு வழங்­கு­வ­தா­னது அர­சாங்­கத்தின் இய­லா­மையை வெளிப்­ப­டுத்­து­கின்­றது. எனவே இந்த போராட்டத்தை நிறுத்த போவதில்லை. கைதுகள் எமக்கு புதியவையல்ல. மஹிந்த ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை நாடு திரும்பியதும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து பாரிய போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்

LEAVE A REPLY