நான் சாமி இல்ல, பூதம் – இணையத்தை தெறிக்கவிட்ட விக்ரம்

ஹரி இயக்கத்தில் `சாமி’ படத்தின் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த மோஷன் வீடியோவின் முடிவில் படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானது.

தூத்துக்குடி கலவரத்தால் அப்பாவி மக்கள் உயிரிழந்த நிலையில், படத்தின் டிரைலர் ரிலீஸை படக்குழு தள்ளி வைத்தது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

டிரைலர் வெளியாகும் முன்பே இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது. பின்னர் 11 மணியளவில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இயக்குனர் ஹரியின் வழக்கமான ஸ்டைலில் மிகவும் பரபரப்பாக இப்படத்தின் டிரைலர் உருவாகி இருந்தது.

இதில் விக்ரம் பேசும் வசனமான, ‘நான் தாய் வயத்தில பொறக்கல… பேய் வயத்தில பொறந்தேன். நான் சாமி இல்ல… பூதம்’ என்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

`சாமி ஸ்கொயர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர். பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்க்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படம் வருகிற அக்டோபரில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY