’நான்தான் நம்பர் 1 என்று நினைக்கிறேன்’ : சொல்கிறார் ரொனால்டோ

index கடந்த எட்டு ஆண்டுகளாக நான்தான் முதலிடத்தில் இருக்கிறேன். வேறு எந்த வீரர்களும் இதுபோல் இல்லை என்று கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறியுள்ளார்.

இது குறித்து ஸ்பெய்ன் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ரியல் மேட்ரிக்ட் அணிக்காக விளையாடிவரும் கிறிஸ்டியானொ ரொனால்டோ, ஃபார்சிலோனா அணிக்காக விளையாடிவரும் லியோனல் மெஸ்ஸியை விட சிறப்பாக விளையாடுவதாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “கடந்த எட்டு ஆண்டுகளாக நீங்கள் பார்த்தீர்களேயானால், நான்தான் முதலிடத்தில் இருக்கிறேன். வேறு எந்த வீரரும் இதுபோல உயரத்திற்கு வந்தது கிடையாது. நீங்கள் முதலிடத்தில் இருக்கிறீர்களோ, இல்லையோ.

பட்டத்தை தக்கவைத்து கொளிகிறோமோ இல்லையோ. புள்ளி விவரங்கள் முக்கியம். ஆனால், சிலபேர் மெஸ்ஸிதான் சிறந்த வீரர் என்று நினைக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் நான்தான் சிறந்த வீரர் என்று நினைக்கிறேன்.

எனக்கு எதிரிகள் வேண்டும். இது விளையாட்டின் ஒரு பகுதி. நான் 18 அல்லது 19 வயதில் இருந்தே கலகக்காரனாக இருக்கிறேன். இத் ஒரு பிரச்சனையே இல்லை. இது எனக்கு நான் அளித்துக்கொள்ளும் ஊக்கம்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY