நான்காவது முறையாக ஜெர்மனியின் அதிபரானார் ஏஞ்சலா மெர்கெல்!

ஜெர்மனியில் 6 மாத கால அரசியல் முட்டுக்கட்டைகளை தகர்த்தெறிந்து நான்காவது முறையாக பெரும்பான்மை கூட்டணி கட்சிகளால் அதிபர் பதவிக்கு ஏஞ்சலா மெர்கெல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிறந்த பொருளாதார பின்னியை கொண்ட ஜெர்மனியில் 2005ஆம் ஆண்டு முதல் மூன்று முறை ஏஞ்சலா மெர்க்கல் அதிபராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், ஏஞ்சலா மெர்க்கல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டும் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனையடுத்து, கடந்த 6 மாக காலமாக கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக இடம்பெற்று வந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வி கண்டன.

இந்நிலையில், அந்நாட்டு பாராளுமன்ற கீழ் சபையில் இன்று நடந்த வாக்கெடுப்பில் 355 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், 364 உறுப்பினர்களின் வாக்கை பெற்று ஏஞ்சலா மெர்கெல் மீண்டும் பதவியை கைப்பற்றியுள்ளார்.

எனவே, ஏஞ்சலா மெர்கெல் ஜெர்மன் அதிபராக நான்காவது முறையாக விரைவில் பதவிப்பிரமாணம் செய்துகொள்வார் என கருதப்படுகிறது.

LEAVE A REPLY