நாணயங்களில் மாற்றம் செய்யப்படும் – மத்திய வங்கி அறிவிப்பு

நாட்டில் பாவனையிலுள்ள நாணயங்களில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் சில்லறை நாணயங்களில் பல மாற்றங்களை செய்யத் திட்டமிட்டுள்ளதாக வங்கி குறிப்பிட்டுள்ளது.

சில்லறை நாணயங்களுக்காக உலோகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தயாரிப்பு செலவினை குறைக்க எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சில்லறை நாணயங்களின் தேவை அதிகரித்துள்ளமையினால், அதன் தயாரிப்பினை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY