நாட்டை இரண்டாக பிளவுபடுத்தாது பாதுகாக்க எமக்கு வாக்களியுங்கள் என மஹிந்த கோரிக்கை

நாடு இரண்டாகப் பிளவுபடுவதற்கு நாம் எதிரானவர்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொருவரும் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை கடவத்தையில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ் ஈழமா, ஒற்றையாட்சி இலங்கையா? என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அமையவுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவந்து நாட்டை இரண்டாகப் பிரித்து தமிழ் ஈழம் அமைப்பதற்கு எதிர்பார்த்துள்ளது.

எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது தமிழ் ஈழத்திற்கு இடமளிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளது.

எனவே தமிழ் ஈழம் அமைத்து நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கு நாம் எதிரானவர்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதனை உறுதிப்படுத்துவதாயின் தாமரை மொட்டுச் சின்னத்தைக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY