நாட்டுக்கு பாதகமான உடன்பாடுகளில் கையெழுத்திடமாட்டேன் – கோத்தா

நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் எந்தவொரு உடன்பாட்டிலும், கையெழுத்திடுவதற்கு தான் இடமளிக்கமாட்டேன் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

‘’வெளிநாட்டு நாடுகளுடன் சிறிலங்கா நட்புடன் இருப்பதை உறுதி செய்வேன். எனினும், அனைத்துலக அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டேன்.

அணிசேரா கொள்கையையே சிறிலங்கா பின்பற்றியுள்ளது. தேசத்தின் இறையாண்மையையும் தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான திட்டங்கள் எனது தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன” என்றும் அவர் கூறினார்.