நாட்டுக்கும் எனது கட்சிக்கும் புதிய தலைவர் தேவை

நாட்டுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் புதிய தலைமைத்துவம் ஒன்று தேவைப்படுவதாக டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி. பெரேரா கூறியுள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டின் அரசியலமைப்புக்கு மதிப்பளிக்கின்ற, கொலைகள் செய்யாத, ஊழல் அற்ற இளம் தலைமுறையின் படித்த தலைவர் ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதுவரை நாட்டில் இருப்பது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை என்றும், 19வது திருத்தத்தின் மூலம் நிறைவேற்றதிகாரம் நீக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத்திற்கு, ஜனாதிபதி பதவிக்கு மாத்திரமன்றி எனது கட்சிக்கும் தற்போது புதிய தலைவர் ஒருவர் வேண்டும் என்று அஜித் பி. பெரேரா கூறியுள்ளார்.