நாட்டில் தற்போது நான்கு அரசாங்கங்கள் – தயாசிறி

நாட்டில் தற்போது நான்கு அரசாங்கங்கள் உள்ளன என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டில் தற்போது ஜனாதிபதியின் ஆட்சியும், பிரதமரின் ஆட்சியும், சபாநாயகரின் ஆட்சியும், எதிர்க்கட்சித் தலைவரின் ஆட்சியும் காணப்படுகின்றது.

சபாநாயகர் கரு ஜயசூரிய, கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி சம்பவத்துக்குப் பின்னர் இருந்தே, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது குறித்த தயார்படுத்தல்களை முன்னெடுத்து வருகிறார்’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.