நாட்டில் உயிர் அச்சுறுத்தல் மிக்க லீசிங் மாபியா ஒன்று உருவாகியுள்ளதாக குற்றச்சாட்டு

நாட்டில் உயிர் அச்சுறுத்தல் மிக்க லீசிங் (குத்தகை) மாபியா ஒன்று உருவாகியுள்ளதாக முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சில லீசிங் நிறுவனங்கள் நாட்டில் கடைப்பிடிக்கப்படாத பல சட்ட திட்டங்களை கையாள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் குறிப்பிட்ட ஒரு லீசிங் நிறுவனத்தினரின் தாக்குதலில் உயிரிழந்த தேசிய முச்சக்கர வண்டிகள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தனவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னரே அவர் இதனை தெரிவித்துள்ளார்.