நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த உடன்படிக்கையிலும் இலங்கை கைச்சாத்திடாது – பந்துல

இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த உடன்படிக்கையிலும் எந்த நாட்டுடனும் இலங்கை கைச்சாத்திடாது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வாராந்தர செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அமெரிக்காவுடன் எம்.சி.சி. உடன்படிக்கையில் கைச்சாத்திடும் என வெளியான தகவல்கள் ஆதமாரமற்றவை என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பான நிபுணர்கள் குழுவின் இறுதி அறிக்கைக்காக அரசாங்கம் காத்திருக்கின்றது என தெரிவித்துள்ள அவர், எவ்வாறாயினும் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த உடன்படிக்கையிலும் அரசாங்கம் கைச்சாத்திடாது என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நியமித்துள்ள குழு இடைக்கால அறிக்கையொன்றை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது எனவும் இறுதி அறிக்கைக்காக அரசாங்கம் காத்திருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட உடன்படிக்கையில் சிறந்த அம்சங்கள் உள்ளனவா என்பது குறித்து இறுதி அறிக்கையிலேயே தெரியவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.