நாட்டின் பாதுகாப்பு எவ்விதத்திலும் பலவீனமடையவில்லை: ஜனாதிபதி

நாட்டின் பாதுகாப்பு எவ்விதத்திலும் வீழ்ச்சியடையவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுவரும் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வரவு செலவு திட்டத்திலும் நாட்டின் பாதுகாப்பிற்கென அதிகமான தொகை ஒதுக்கப்பட்டே இருந்தது. இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் ஒருசிலர் முன்வைக்கும் கருத்துக்களை நான் நிராகரிக்கின்றேன்.

கடந்த வரவு செலவு திட்டத்தில் 200 பில்லியனுக்கும் அதிகமான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும், பாதுகாப்பு செலவு இன்னமும் அதிகமாகக் காணப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்யைின் பிரதமர் நாட்டில் இல்லாத நிலையில் நேற்று நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து, ஊடக பிராதானிகளுடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பிற்கு ஏற்ப, ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை ஜனாதிபதி, ஊடகப் பிரதானிகளைச் சந்தித்தார். இந்த சந்திப்பில், நாட்டின் பாதுகாப்பு குறித்து கருத்து தொிவித்துள்ளார்.