நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பாரிய சுற்றிவளைப்பு!

இலங்கையில் கடந்த வருடம் நாடுபூராகவும் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்புக்களில் மாத்திரம் 40290 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கமைய 14 விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் 2018 இல் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.