நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இன்று(வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இந்த கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்கால நாடாளுமன்ற அமர்வுகளின் போது விவாதிக்கப்படவுள்ள விடயங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து இதன்போது விவாதிக்கப்படவுள்ளது.