நாடாளுமன்றைக் கூட்டுங்கள் – அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலையைத் தீர்ப்பதற்கு, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, ஐக்கிய அமெரிக்கா மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தைக் கூட்டுவதில் ஏற்படும் தாமதமானது இலங்கையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துமென, அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஹேதர் நயரின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டுக்குள் நல்லாட்சி மற்றும் நிலையானத் தன்மையை ஏற்படுத்த விரைவான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.