நாடாளுமன்றில் மோதல்; சபை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட உரையாற்றிய போது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றின் மத்திய பகுதிக்கு பிரதேவசித்து எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதனால் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக நாடாளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதன் பொருட்டே, விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றது.

அந்த விடயம் தொடர்பில் விசேட நாடாளுமன்ற அமர்வை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஒன்றிணைந்த எதிர்க் கட்சி மற்றும் ஜே.வி.பி என்பனவும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்படி, அதுதொடர்பில் கலந்துரையாட நேற்றைய தினம் சபாநாயகர் கட்சி தலைவர்களின் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.

அதன்படி, முறிவிநியோக மோசடி குறித்த விசாரணை அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

குறித்த அறிக்கை குறித்த விவாதத்தை நடத்துவதற்கான திகதி தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், காமினி லெக்குகே மற்றும் மரிக்கார் ஆகியோருக்கிடையில் சண்டை இடம்பெற்றபோது, மரிக்காரின் கன்னத்தில் அறைந்தார் காமினி லொக்குகே. இதையடுத்து காமினி லொக்குகேயின் இருப்பிடத்திற்குச் சென்ற மரிக்கார், காமினி லொக்குகே மீது அடித்து விட்டு பின்கதவால் வெளியேறியுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமளிதுமளியில் சண்டைகளை விலக்குப்பிடித்துக்கொண்டிருந்த காவிந்து ஜெயவர்தன திடீர் மயக்முற்று விழுந்துள்ளார்.

LEAVE A REPLY