நாடாளுமன்றில் தமிழருக்காய் முழங்கிய விக்னேஸ்வரன்

தமிழர்களின் உரிமைகளை அங்கிகரிக்குமாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற கன்னி அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையுள்ளதெனவும் ஆனால் கடந்த காலங்களில் இது கேள்விக்குறியாகவே இருந்ததாகவும் புதிய ஆட்சியிலாவது இந்த நிலைமை மாற வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.