நாடாளுமன்றில் குழப்பத்தை விளைவித்தோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை

நேற்றைய தினம் நாடாளுமன்றில் குழப்பத்தை விளைவித்த அனைத்து உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுப்பதற்காக வீடி​யோ ஆதாரங்களை ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாடாளுமன்றில் 225 உறுப்பினர்கள் இருக்கும் போது, அங்கு ஏற்படும் குழப்பங்களை கட்டுப்படுத்துவது சபாநாயகருக்கு கடினமான செயல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்பட்ட குழப்பகரமான சூழ்நிலையை தடுப்பதற்கான பொறுப்பு சபாநாயகருடையது என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY