‘நாச்சியார்’ பட சர்ச்சை – நடிகர்கள் எப்படி பேசினாலும் பிரச்சினை வராது – ஜோதிகா

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் ‘நாச்சியார்’.

இதில் ஜோதிகா போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் ‘டீசர்’ சமீபத்தில் வெளியானது. அதில் ஜோதிகாவின் ஆவேசமான வசனக்காட்சி இடம் பெற்றது.

இந்த காட்சியில் ஜோதிகா பேசிய ஒரு வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘பெண்களை அவமதிக்கும் வார்த்தையை பேசிவிட்டார்’ என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. ஜோதிகா பேசிய அந்த ஒரே வார்த்தை ‘நாச்சியார்’ படத்துக்கு விளம்பரமாகவும் அமைந்தது. இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த நிலையில், சர்ச்சைக்குரிய அந்த வசனம் குறித்து ஜோதிகா அளித்த பேட்டியில்….

“ஒரு நடிகை அந்த வார்த்தையை பேசியதால் தான் பெரும் சர்ச்சையானது. அதையே நடிகர் யாராவது பேசி இருந்தால் யாரும் கண்டுகொண்டிருக்க மாட்டார்கள். டீசரை பார்த்துவிட்டு எனது பாத்திரம் குறித்து ஒரு முடிவுக்கு வராதீர்கள். படத்தை பார்த்துவிட்டு பேசுங்கள்.

படத்தில் எனது கதாபாத்திரம், கதையின் சூழல் காரணமாக அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. படம் பார்த்தால் அதில் நான் பேசிய வார்த்தை சரியானது தான் என்பது ரசிகர்களுக்கு புரியும்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY