நவாஸ் செரீப்பின் மனைவி 68 ஆவது வயதில் சற்றுமுன்னர் காலமானார்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் மனைவி சற்றுமுன்னர் லண்டனில் காலமானார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நவாஸ் செரீப்பின் மனைவியான குல்சூம் பேகம் தொண்டை புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார்.

இதன் பின்னர் அவரின் உடல் நிலை மோசடைந்ததால் அவருக்கு உயிர் காக்கும் மருத்துவ கருவிகளின் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் சபாஸ் செரீப் அறிவித்துள்ளார்.

68 வயதான குல்சூம் பேகத்தின் இறுதி சடங்குகள் பாகிஸ்தானில் நடைபெறும் என்றும் அவரது மரணம் தொடர்பில் சிறையில் உள்ள நவாஸ் செரீப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.