நவம்பர் மாத ராசி பலன்கள்

நவம்பர் மாதத்திற்குரிய  பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

இங்கு தரப்படும் பலன்கள் அனைத்தும் கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளினடிப்படையிலும், கிரகநிலைகளினடிப்படையிலும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.

மேஷம் : (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

எந்த ஒரு வேலையையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்து வெற்றிபெறும் மேஷராசியினரே நீங்கள் பேசி காரியங்களை முடிப்பதில் வல்லவர். இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி செவ்வாய் ராசிக்கு 5-ல் இருந்து கிரக கூட்டணி சேர்ந்துள்ளார். பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன், குரு ஆகியோருடன் இணைந்து பலவிதமான நற்பலன்களை உங்களுக்கு அள்ளித் தரப் போகிறார்.

தனாதிபதி சுக்கிரனின் சேர்க்கை பெற்று சஞ்சாரம் செய்வது பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். பாக்கியாதிபதி குருவுடன் இருக்கும் இணைவால் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கட்டுப்பாடற்ற சுதந்திர எண்ணம் உண்டாகும். சிறிய விஷயங்களில் மனநிறைவு ஏற்படும்.

தன குடும்ப ஸ்தானாதிபதியான சுக்கிரன் ராசிநாதன் மற்றும் சுபகாரகன் குருவுடன் இணைந்திருக்கிறார். எனவே குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது மற்றவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கை துணையின் நலனில் அக்கறை காண்பிப்பீர்கள்.

பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தை அதன் அதிபதி சனியே பார்க்கிறார். மேலும் அவருகு ராசிநாதன் செவ்வாய் தசம கேந்திரம் பெற்றிருக்கிறார். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும். வாடிக்கையாளர்கள் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரத்தும் திருப்தி தரும்.

பெண்களுக்கு பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களில் கூட கவனமாக செய்வீர்கள்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது.

அரசியல்துறையினருக்கு எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை குறைப்பது நன்மை தரும். வேலைகளை கவனமுடன் செய்வது நல்லது. எதிலும் நிதானம் தேவை.

மாணவர்களுக்கு சக மாணவர்களின் கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்களை கூறாமல் அனுசரித்து செல்வது சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறூம் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று அரளி மலரை அர்ப்பணித்து வழிபடவும். 11 முறை வலம் வரவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வள்ர்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி தேய்பிறை: வியாழன், வெள்ளி

ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

எந்த ஒரு காரியத்தையும் நிதானமாக செய்து முடிக்கும் ரிஷபராசியினரே உங்களது கருத்துக்கு  மற்றவர்களிடம் வரவேற்பு இருக்கும். நீங்கள் கொடுத்த வாக்கை வாழ்க்கையாக வாழ்பவர்.

இந்த காலகட்டத்தில் கிரக சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதை காண முடிகிறது. ராசிநாதன் கேந்திரம் பெற அவருடன் இணையும் கிரகங்களாலும் பார்வையாலும் நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எதையும் செய்வது நல்லது. செவ்வாய் சஞ்சாரம் ராசிக்கு 4-ல் இருப்பதும் குரு, ராசிநாதன் சுக்கிரன் சேர்க்கை பெறுவதும் நல்ல பலன்களை பெற்றாலும் எதிலும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. அதிக முயற்சி செய்ய வேண்டி இருக்கும். பயணங்கள் ஏற்படலாம்.

சுப காரகன் குரு மற்றும் ராசிநாதனுடன் இணைந்திருக்கும் இணைவு குடும்பத்தில் மன நிறைவு ஏற்படும் வகையில் எல்லாம் நடக்கும். வாழ்க்கை துணையால் நன்மை உண்டாகும். குழந்தைகளுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். உறவினர், நண்பர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். நிதானம் தேவை.  பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். சனியின் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் விலகும்.

ராசிநாதன் தொழில் ஸ்தானத்தைப் பார்த்தாலும், விரையாதிபதி செவ்வாயும் பார்க்கிறார். தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். பணியாளர்கள் செயல்கள் உங்களுக்கு கோபத்தை தூண்டும்படியாக இருக்கலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்கலாம். நெருப்பு, ஆயுதங்களை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் ஆவணங்களை கவனமாக வைத்துக் கொள்வது நன்மை தரும்.

பெண்களுக்கு உணர்ச்சிவசப்படாமல் எதையும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். கடின முயற்சியின் பேரிலேயே காரியங்கள் பெற்றி பெறும்.

கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும்.

அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். எடுத்திருக்கும் அரசாங்க வேலைகள் மூலம் நன்மை உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்து பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

பரிகாரம்: சிவன் கோவிலுக்கு சென்று வலம் வரவும். பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ளவும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியம் நல்லபடியாக முடியும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வெள்ளி; தேய்பிறை: திங்கள், புதன், வெள்ளி;

மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

திட்டமிடுவதில் கெட்டிக்காரர்களான மிதுன ராசியினரே நீங்கள் எதிலும் சிக்காமல் நழுவுவதில் கெட்டிக்காரர். நீங்கள் நிதானமாக அனைத்து காரியங்களையும் அணுகுபவர். இந்த காலகட்டத்தில் குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். காரிய தாமதத்தை உண்டாக்கும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது சிரமம்.

குடும்பத்தில் இருப்பவர்களின் வீண் பேச்சால் மனவருத்தம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கள். வீண் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நன்மை தரும். உறவினர் நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை. குருவால் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கலாம். திருமண முயற்சிகள் கைகூடும். கொடுத்தவாக்கை காப்பாற்றுவீர்கள். தூக்கம் வராமல் தவித்த இரவுகள் மாறி நிம்மதியான தூக்கம் வரும்.

தொழில் ஸ்தானத்தில் கேது அமர்ந்திருக்கிறார். தொழில் ஸ்தானாதிபதி குரு உங்கள் ராசிக்கும், தொழில் ஸ்தானத்திற்கும் மறைந்திருக்கிறார். தொழில் தொடர்பாக எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு வேகம் இருக்காது. நிதானமாக நடக்கும். பணவரத்து தாமதப்படலாம். ஆர்டர்கள் தொடர்பாக வீண் அலைச்சல் உண்டாகலாம்.

பெண்களுக்கு குழப்பங்கள் நீங்கள் மனதில் தெளிவு உண்டாகும். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.

கலைக்காரகன் சுக்கிரனின் இருப்பால் கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும்.

அரசுகாரகன் சூரியன் ராசிநாதனுக்கு பரிவர்த்தனை பெற்றிருக்கிறார். இருவருக்குமே அதனதன் வீடு பகை வீடாக அமைவதால் அரசியலில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் மந்தமாக காணப்படும். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கூடுதல் மதிப்பெண் பெற அதிக நேரம் படிப்பது நல்லது.

பரிகாரம்: பைரவர் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். நெய் தீபம் ஏற்றி வழிபடவும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வியாழன்; தேய்பிறை: புதன், வியாழன்

கடகம்: (புனர் பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம்)

ஒரு காரியத்தை செய்யும் முன்பு அது சரியா தவறா என்று பல முறை மனதுக்குள் கேள்வி எழுப்பி பின்னர் ஒரு முடிவு எடுக்கும் கடகராசியினரே நீங்கள் உணர்ச்சிப் பிழம்பானவர். இந்த காலகட்டத்தில் தனஸ்தானத்தில் இருக்கும் கிரக கூட்டணியால் உங்களுக்கு வலுவானதாக இருக்கும். ஆனால் அதே வேளையில் தனாதிபதி சூரியன் இருக்கும் ராசி அவருக்கு பகை வீடாக இருந்தாலும் உங்களுக்கு நன்மை தரும் யோகத்தில் இருக்கிறார். வீண் செலவு கட்டுப்படும். சேமிப்பு அதிகரிக்கும். எந்த ஒரு வேலையை செய்து முடிப்பதிலும் இருந்த தடை தாமதம் நீங்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக வாதாடுவதையும் தவிர்ப்பது நல்லது. வருமானம் கூடும். எந்த வேலையை செய்தாலும் மன திருப்தி உண்டாகும்.

குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் கிரக சேர்க்கையால் குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். மகிழ்ச்சி உண்டாகும். பல வித குழப்பங்கள் வந்து வந்து போகும்.

தொழில் ஸ்தானத்தை குரு பார்க்கிறார். சுக லாபாதிபதி சுக்கிரன் தனஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் உண்டாகும். வரவு இருந்த போதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் செலவு உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம்.

பெண்களுக்கு அடுத்தவர்கள் பிரச்சனைகளை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவு ஏற்படலாம். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். திறமை வெளிப்படும்.

மாணவர்களுக்கு ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களை சந்தேகம் நீங்கி தெளிவாக படிப்பது நல்லது.  மனதில் உற்சாகம் உண்டாகும்.

பரிகாரம்: திங்கட்கிழமையில் சிவனை வில்வ அர்ச்சனை செய்து வணங்குவது முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்க பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வியாழன் தேய்பிறை: திங்கள், வியாழன்

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

அதிகார தோரணையுடன் காணப்படும் சிம்மராசியினரே நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டீர்கள். இந்த காலகட்டத்தில் வேகத்தை விட்டு விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும். ராசியாதிபதி சூரியன் தனஸ்தானத்தில் ராகுவுடன் அமர, ராசியில் நால்வர் கூட்டணியாக இருக்க, ராசியை சனி பார்க்க என இருப்பதால் நன்மை தீமை மாறி மாறி பலன்களை அனுபவிக்க போகிறீர்கள். தனஸ்தானத்தில் சூரியன் இருந்தாலும் பணவரத்து எதிர்பார்த்ததை விட குறையும். நினைத்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம் கவனம் தேவை. மற்றவர்களிடம் உங்கள் கருத்துக்களை கூறும்போது அவர்கள் தவறாக அதை புரிந்து கொள்ளலாம்.

குடும்ப ஸ்தானத்தில் குடும்பத்தில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். கணவன், மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும். அடுத்தவருக்கு ஆலோசனை சொல்ல போய் பிரச்சனை வரலாம். பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும். அக்கம் பக்கத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் உதவிகரமாய் இருப்பார்கள்.

தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் ராசியில் இருந்தாலும் தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி உண்டாகும். எதிர்பார்த்த அளவு வியாபாரத்தில் லாபம் கிடைக்குமா என்ற எண்ணம் உண்டாகும். கூட்டு தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நன்மை தரும். எல்லாவித ஆவணங்களையும் சரியாக வைத்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரும். மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது நல்லது.

பெண்களுக்கு விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும். எதிர்பார்த்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம் கவனம் தேவை. வீண் அலைச்சல் ஏற்படும்.

கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும்.

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கவனமாக கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோயிலுக்கு சென்று சிவனையும் நவக்கிரகத்தில் சூரியனையும் தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா நன்மைகளையும் உண்டாக்கும்.

பரிகாரம்: விநாயக பெருமானுக்கு தேங்காய் மாலை சாத்தி அர்ச்சனை செய்து வழிபடுவது தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கும்.  செல்வம் சேரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, புதன்; தேய்பிறை: திங்கள், புதன்
கன்னி:  (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

புத்தி கூர்மையுடன் செயல்பட்டு எந்த சிக்கலையும் தீர்க்கும் கன்னிராசியினரே நீங்கள் இரவு பகல் என பாராமல் உழைப்பவர்.  இந்த காலகட்டத்தில் உங்களுக்கு எதிர்ப்புகள் அகலும். பகை விலகி எதிலும் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.

குடும்ப ஸ்தானாதிபதி சுக்கிரன் மறைந்திருந்தாலும் சுயசாரம் பெற்றிருக்கிறார். குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் மாறி சுமூகமான நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உடல் நலம் சிறக்கும். நண்பர்கள் உதவியால் எதிர்பார்த்திருந்த காரியங்கள் நல்ல முறையில் முடியும்.

தொழில் ஸ்தானம் வலுவாக இல்லாமல் இருந்தாலும் ராசிநாதனுடைய பாதசாரத்தால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும். மேலிடத்தில் உங்களுக்கான ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி விடுவார்கள். பணவரத்து கூடும்.

பெண்களுக்கு சாதக பாதகங்களை பற்றி கவலைப்படாமல் எந்த காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.

கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு நலல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மைதரும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும்.

மாணவர்களுக்கு போட்டிகள் குறையும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

பரிகாரம்: குல தெய்வத்தை பூஜைபோட்டு வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி தேய்பிறை: திங்கள், வெள்ளி

துலாம்: (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

அடுத்தவரை அனுசரித்து செல்வதில் கெட்டிக்காரர்களான துலா ராசியினரே நீங்கள் உழைத்து வாழ்க்கையில் நல்ல இடத்தைப் பிடிப்பீர்கள்.

இந்த காலகட்டத்தில் கிரக சூழ்நிலை உங்களுக்கு ஆதரவாக இருப்பதைக் காட்டுகிறது. ராசிநாதன் சுக்கிரன் லாபஸ்தானத்தில் குரு, செவ்வாய் இருப்பதால் யோகம் உண்டாகிறது. ஆனாலும் சின்ன விஷயங்களுக்கு கூட உங்களுக்கு கோபம் வரலாம். எனவே கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்கள் சாதகமாக நடைபெறும். தனஸ்தானத்தில் இருக்கும் சனியால் எதிர்பாராத பணத்தேவை உண்டாகும். அதனை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். எதிலும் இழுபறியான நிலை காணப்படும். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம் கவனம் தேவை.

குடும்ப ஸ்தானத்தில் சனி இருந்தாலும், அந்த ஸ்தானத்தை குடும்பாதிபதி செவ்வாய் பார்க்கிறார். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர் வருகை இருக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் உள்நாட்டிற்கு திரும்புவதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகும்.

தொழில் ஸ்தானம் நல்ல நிலையில் இருந்தாலும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும் வீண் அலைச்சலும் இருக்கும். வீண் பகை உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பண வரத்து எதிர்பார்த்ததை விட குறையக் கூடும். கடன் விஷயங்களை தள்ளிபோடுவது நல்லது. புதிய நபர்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும்போது கவனம் தேவை.

பெண்களுக்கு கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்களை சாதகமாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்த்த தகவல் தாமதப்படலாம்.

கலைத்துறையினர் சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.

அரசியல்வாதிகளுக்கு பாடுபட வேண்டியிருந்தாலும் மிகவும் நன்றாக இருக்கும். மாணவமணிகள் தீவிர முயற்சி எடுத்துபடிப்பது அவசியமாகும்.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் டென்ஷன் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும்.  தைரியம் கூடும். பணவரத்து திருப்திதரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: வியாழன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வியாழன்

விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

எடுத்த காரியத்தை சோர்வடையாமல் தொடர்ந்து செய்து முடிக்கும் ஆற்றலு டைய விருச்சிக ராசியினரே இந்த காலகட்டத்தில் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். ராசியில் சனி இருந்தாலும் ராசிநாதன் செவ்வாய் வலுவாக இருக்கிறார். தொழில் ஸ்தானத்தில் குருவுடன் இணைந்து குருமங்கள யோகம் பெறுகிறார். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம். வாகனங்களால் செலவும் ஏற்படும். நண்பர்களிடம் இருந்து பிரிவு உடல்சோர்வு உண்டாகலாம்.

தொழில் ஸ்தானம் வலுப்பெற்று இருப்பதால் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது.

பெண்களுக்கு பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும்.

அரசியல் துறையினருக்கு இந்த காலகட்டம் சில நற்பலன்களை தந்தாலும் மனகஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது.

கலைத்துறையினருக்கு கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வியாழன்; தேய்பிறை: வியாழன், வெள்ளி

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

அமைதியுடனும் சாந்தமாக பேசும் குணமும் உடைய தனுசு ராசியினரே நீங்கள் ஆன்ம ரீதியாக பலம் உடையவர்கள். ராசிநாதன் குரு பாக்கியஸ்தானத்தில் நட்பு வீட்டில் அமர பாக்கியாதிபதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் பரிவர்த்தனை யோகத்தில் இருக்க, பாக்கியஸ்தானத்தில் கிரக கூட்டணி அமைய என இந்த காலகட்டத்தில் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். கிரக சேர்க்கைகள் எதிலும் வெற்றியும் சந்தோஷத்தையும் தரும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்.

குடும்பஸ்தானாதிபதி சனி விரையஸ்தானத்தில் இருந்தாலும் அவர் தனது மூன்றாம் பார்வையால் குடும்ப ஸ்தானத்தைப் பார்க்கிறார். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.

ஏழரை சனி இருந்தாலும் ராசிநாதன் பார்வையாலும், தொழில் ஸ்தானத்தில் இருக்கும் சூரியனாலும் தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற் கொண்டு வியாபாரத்தை விரிவு படுத்து வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.  மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும்.

பெண்களுக்கு காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும்.

கலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வள்ர்பிறை: வியாழன், வெள்ளி; தேய்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி

மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

நியாயம், நேர்மை, இதுதான் வாழ்க்கை   என்று எண்ணும் மகர ராசியினரே நீங்கள் வாழ்க்கையில் அடித்தட்டிலிருந்து மேல் நோக்கி வருபவர்கள்.  இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சனி லாபஸ்தானத்தில் இருந்தாலும் நான்கு கிரக கூட்டணி அஷ்டமஸ்தானத்தில் இருப்பதால் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். கவனம் தேவை.

குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. பணவிஷயத்தில் கூடுமானவரை அடுத்தவரை நம்புவதை தவிர்ப்பது நல்லது.

தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் அந்த ஸ்தானத்திற்கு லாபஸ்தானத்தில் இருக்கிறார். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும்போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் மன வருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை உருவாகலாம். எச்சரிக்கை தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படலாம்.

பெண்களுக்கு கோபத்தை தவிர்த்து நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக  முடியும்.

கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம். புதிய ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர்.

மாணவர்களுக்கு திட்டமிட்டு பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வெள்ளி; தேய்பிறை: வியாழன், வெள்ளி;

கும்பம் :(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

உழைப்பதற்கு அஞ்சாத கும்பராசியினரே நீங்கள் எதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போன்று செயல்படுவீர்கள். நீங்கள் அனைவரையும் அனுசரித்து செல்லக் கூடியவர். இந்த காலகட்டம் என்பது உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான காலகட்டம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். குரு பார்வையுடன் சுக பாக்கியாதிபதி சுக்கிரன், தைரிய தொழில் அதிபதி செவ்வாய் பார்வை பெறுவதால் மிக அருமையான நேரத்தை பயன்படுத்திக் கொள்வது நல்லது. அறிவு திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் என்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம். கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை.

குரு பார்வையின் பலனால்  பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் குறையும்.  அதன் மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்திசாதூர்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டு பேசி அதன் பிறகு செய்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தை குறைப்பது நல்லது.

தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் சனி அமர்ந்திருக்கிறார். அவரை தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் பார்க்கிறார். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சனை வராமல் தடுக்கும்.

பெண்களுக்கு அறிவுபூர்வமாக செயல் பட்டு சில முக்கிய முடிவு எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த காரியம் நிறைவேறும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.

அரசியலில் உள்ளவர்கள் வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை.  சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும்.

மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய எண்ணம் உண்டாகும். மேல் படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள். சக மாணவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.

பரிகாரம்: முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி; தேய்பிறை: ஞாயிறு, வியாழன்

மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

எந்த ஒரு காரியத்தையும் முன்னின்று செய்ய ஆசைப்படும் மீன ராசியினரே இந்த காலகட்டத்தில் பொருள் சேர்க்கை உண்டாகும். ராசிநாதன் ஆறாமிடத்தில் மறைந்திருந்தாலும் அவரின் பார்வையால் அனைத்து விதமான நலங்களையும் பெறப் போகிறீர்கள். தனாதிபதி செவ்வாயின் அஷ்டம பார்வையால் சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்கது. விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இட மாற்றம் ஏற்படும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம் கவனம் தேவை.

குடும்ப ஸ்தானத்தை ராசிநாதன் குரு பார்ப்பதால் குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்த மனவருத்தம் நீங்கும். வாழ்க்கை துணையின் உடல் நிலையில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். பிள்ளைகள் வழியில் செலவு உண்டாகலாம். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

தொழில் ஸ்தானத்தை ராசிநாதனே பார்ப்பது சிறப்பு. தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட அதிகமான லாபம் தரும். ஆனால் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப்படுவார்கள். செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் விவகாரங்களில் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. பொறுப்புகள் கூடும்.

பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுத்த வேலையை செய்து முடிக்க காலதாமதமாகலாம். வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகந்த காலகட்டமிது. கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள்.

அரசியல்வாதிகள், சமூக சேவகர்களுக்கு பலன்கள் நன்மை தீமை என கலந்து கிடைத்தாலும் சிறப்பாக இருக்கும். எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும்.

பரிகாரம்: தினம்தோறூம் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வருவது.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி

LEAVE A REPLY