நல்லூருக்கு விஜயம் செய்து பாதுகாப்பு நிலவரங்களை பார்வையிட்ட இராணுவத் தளபதி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க, வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

நல்லூர்க் கந்தன் ஆலய உற்வச கால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க இன்று ஆராய்ந்துள்ளார்.

இரானுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன் போது இராணுவத் தளபதியுடன் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி உள்ளிட்ட இராணுவத்தினரும் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இராணுவத் தளபதியின் நல்லூரிற்கான வருகையை முன்னிட்டு ஆலயத்தில் பலத்த பாதுகாப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, பிரதமரின் வருகையை முன்னிட்டு தொடர்ந்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.