நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு யாழில் சத்தியப் பிரமான நிகழ்வு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு யாழ் மாவட்ட செயலகத்தில் சத்தியப்பிரமான நிகழ்வு இன்று இடம்பெற்றது.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினால் இம் மாதம் 8ம் திகதியில் இருந்து 14ம் திகதிவரை தேசிய நல்லிணக்க வாரமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நாட்டின் பல்வகைமைத் தன்மையயை ஏற்று இலங்கையர் என்ற வகையில் அனைவரும் ஒருமித்து வாழக்கூடிய சூழலை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் யாழ் மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமானத்தை மேற்கொண்டனர்.

யாழ் மாவட்செயலாளர் நா.வேதனாயகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY