நல்லிணக்கம் அனைத்து இனங்களுடனான ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும் – சஜித்

நாட்டில் சுயாதீனத்தை பாதுகாக்க நல்லிணக்கம் அனைத்து இனங்களுடனான ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “யுத்தம் முடிந்து 5 நாட்களில் பான் கீ மூனுடன் மேற்கொண்ட கூட்டுப்பிரகடனத்தின் மூலம் உள்நாட்டில் தீர்த்துக்கொள்ள முடியுமாக இருந்த பிரச்சினையை சர்வதேச மயமாக்கியது அன்றிருந்த அரச தலைவராவார்.

ஆகவேதான் சர்வதேசம் எமது உள்ளக விடயங்களில் தலையிட்டு வருகின்றது.

அதனால் நாட்டின் இறையான்மை, தனித்துவம் அனைத்தையும் இந்த கூட்டு பிரகடனத்தின் மூலம் காட்டிக்கொடுத்துள்ள அரசாங்கம், நாட்டின் ஒற்றையாட்சி தனித்துவத்தை பாதுகாக்க செயற்படும் எதிர்க்கட்சியினருக்கு சேறுபூச முற்படக்கூடாது.