நல்லாட்சி அரசாங்கம் 19 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தை பாதுகாத்தது

கடந்த நல்லாட்சி அரசாங்கம் மீது எவ்வகையான விமர்சனங்கள் காணப்பட்டாலும் அவர்கள் தொடர்ந்தும் 19 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தை பாதுகாத்தாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் உறுப்பினர் கே.டீ. லால்காந்த, கண்டியில் நேற்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

அவ்வாறு 19 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் பாதுகாக்கப்பட்டதன் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் மக்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைத்தாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தேவையேற்படின் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட தயார் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தோல்வியடைவது நிச்சயம் என உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.