நரேந்திர மோடி, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தொலைப்பேசி அழைப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் தொலைப்பேசி அழைப்பொன்றை மேற்கொண்டு ஜனாதிபதிக்கு தமது வாழ்த்தை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருடத்தினுள் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நட்புறவை தொடர்ந்தும் வலுப்படுத்த கூடியதாக இருக்கும் என நம்புவதாக இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் உறவுகளை நெருக்கமாக வைத்திருக்க அர்ப்பணிப்புடன் செயற்பட இரு நாட்டு தலைவர்களும் இதன்போது அவதானம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.